இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர் ஆபாச காணொளிகள் பல்வேறு நபர்களால் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி சமூக வலைத்தளங்களில் இவ்வாறு ஆபாசமான காணொளிகளை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு ஆபாச காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணை நடத்தி இந்த வருடத்திற்குள் தண்டனை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.