தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய் பல வசூல் சாதனைகளை செய்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் GOAT படமும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான இப்படம் கடந்த வாரம் 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 4 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, GOAT தமிழ்நாட்டில் 4 நாட்களில் ரூ. 102 கோடி வரை வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 75 கோடிக்கு GOAT பிசினஸ் செய்யப்பட்டிருந்த நிலையில் ரூ. 130 கோடி வசூல் செய்தாலே Break Even என சொல்லப்பட்டது. அதற்கு இன்னும் 28 கோடிகளே மீதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.