Shanu
Matale
தற்போதைய அரசாங்கம் போதைப்பொருளை ஒழிப்பதற்கு பொலிஸாருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் மற்றும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் போதைப்பொருள் கிடங்காக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகம் 2014 இல் 352 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டது.
தற்போது அங்குள்ள 92 கடைகளில் 80% கடைகள், பலகைகள் இற்று போயுள்ளமை , மின் விளக்குகள் சரியாக இயங்காமை, அசுத்தமான சூழல், துர்நாற்றம், விதிமீறல் போன்றவற்றால் மூடப்பட்டுள்ளன.
எனவே இது தொடர்பில் பொலிஸாருக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.