IPL 2025 இல் இலங்கை வீரருக்கு அழைப்பு

Shanu
இலங்கை அணியின் சகலதுறை வீரர் தசுன் ஷானக டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18வது தொடர் மார்ச் 22ம் திகதி ஆரம்பமாக உள்ளது. தற்போதைய நிலையில், போட்டியில் இணையும் அனைத்து அணிகளும் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன.
இரண்டு வருட ஐபிஎல் தடைக்குட்பட்ட ஹெரி புரூக்கிற்கு பதிலாக தசுன் ஷானக இந்த தொடருக்காக டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச லீக் 20-20 போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற டுபாய் கெப்பிடல்ஸ் அணியின் பலம் வாய்ந்த வீரரான தசுன் ஷானக, அந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, தசுன் ஷானக தற்போது டெல்லி கெப்பிடல்ஸ் அணியுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும், இதனை விரைவில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.