உலகம்
Trending

அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் புடின் – உலகிலேயே அதிக வருடம் அதிகாரத்தில் இருந்த தலைவர்கள் லிஸ்டில் இவருமா?

ரஷ்ய அதிபர் புடினின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அந்நாட்டில் அதிபர் தேர்தல் வரும் 2024 மார்ச் 17 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய அதிபராக தொடர்ந்து 4 முறை பதவி வகித்துள்ள புதின், 5-வது முறையாகவும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

ரஷ்யாவை பொறுத்தவரை அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் தான். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவியில் இருக்க முடியாது. ஆனால் புடின் தனது பதவியை நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்ததை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 2036 ஆம் ஆண்டு வரை அவரால் அதிபர் பதவியில் நீடிக்க முடியும்.

ரஷ்யாவின் சர்வ வல்லமை படைத்த தலைவராகவும் உலக அரங்கில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராகவும் புடின் நீடித்து வருகிறார்.

சர்வதேச அளவில் இதுவரை நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த தலைவர்கள் பட்டியலில் தற்போது 9-வது இடத்தை ரஷ்ய அதிபர் புதின் பிடித்துள்ளார். 71 வயதான புதின் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிகாரத்திற்கு வந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக ரஷ்யாவின் அதிகாரம் மிக்க உச்சபட்ச பொறுப்பில் தொடர்ந்து இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button