சினிமா
Trending

அழகா இருந்தா தான் பேசுவாராம் – நிக்சனை வெளுத்து வாங்கிய போட்டியாளர்கள்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினம் ஒரு பிரச்சனை வைத்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் நிக்சன் வினுஷா பற்றி பேசிய கமெண்டை பிக் பாஸ் திரையில் ஒளிபரப்பினார்.

இதையடுத்து நான் தவறான நோக்கத்தில் இதை பேசவில்லை. இதற்காக நான் வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டதாக கூறினார் நிக்சன். ஆனால் வினுஷா பேட்டிகளில், நிக்சன் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை.அவர் உருவ கேலி செய்தது என்னை மிகவும் காயப்படுத்தியது என்றார்.

இந்நிலையில் இந்த டாபிக் பற்றி நேற்று விஷ்ணு மற்றும் மணி இருவரும் பேசினார்கள். மணி பேசுகையில், அந்த கமெண்ட் படிக்கும்போது தப்பாகத்தான் இருந்தது. அழகா இருந்தால் தான் மற்றவர்களிடம் பேசுவேன் என நிக்சன் கூறியிருந்தார். அவர் விளையாட்டாக கூறினாலும் அப்படி பேசக்கூடாது. மற்றவர்களிடம் பழகுவதற்கு எதற்கு அழகு பார்க்கவேண்டும் என பேசினார் மணி.

இதைக்கேட்ட விஷ்ணு அப்படியா ? அப்போ இவர் மட்டும் என்ன பெரிய அழகா ? என கேட்டார். பெண்களின் உருவத்தை பற்றியெல்லாம் பேசுவது ரொம்ப தப்பு என பேசினார் விஷ்ணு. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை நிக்சனிடம் நேரடியாக கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

மேலும் மணி கேட்கவில்லை என்றாலும், விஷ்ணு இதனை ஒருநாள் நிக்சனிடம் நேரடியாக கேட்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆரம்பத்தில் நிக்சன் ரசிகர்களின் ஆதரவை பெற்று வந்தார். ஆனால் சமீபகாலமாக நிக்சனின் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு அந்தளவிற்கு பிடிக்கவில்லை என்பதே பல ரசிகர்களின் கருத்தாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button