அவுஸ்திரேலியா
Trending

ஆஸ்திரேலியாவில் ஹோட்டலின் திறந்தவெளி உணவருந்தும் பகுதியில் புகுந்த சொகுசு கார் – ஐந்து பேர் பலி..!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு . நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம் உள்ளது . நேற்று மாலை இந்தப் பகுதியில் ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார் இந்த பகுதிக்குள் புகுந்தது.

இதில் ஒரு சிறுவன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார். அப்போது காரை ஓட்டிவந்தது 68 வயது முதியவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் மது அருந்தி கார் ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் எடுத்துக் கொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button