இலங்கை
Trending

இலங்கைக்கு குறைந்த கட்டணத்தில் விமானசேவை – எயார் அரேபியா அறிவிப்பு…!!

அபுதாபியிலிருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை எயார் அரேபியா ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் எயார் அரேபியா தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட விமானம் நேற்று வெள்ளிக்கிழமை (8) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

158 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களுடன் 3L-197 என்ற எயார் அரேபியா விமானம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

மேலும் எயார் அரேபியா, புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 08.00 மணிக்கு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த்து மீண்டும் இரவு 8.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button