இலங்கை
Trending

இலங்கையில் இடம்பெறும் பாரிய மோசடிகள் – மக்களுக்கு பொலிஸார் விசேட அறிவித்தல்…!!

இலங்கையில் பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி மோசடி சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அண்மைக் காலமாக பல்வேறு நபர்களால் மக்களுக்கு அன்பளிப்பு அல்லது கடன் வழங்குவதாக கூறி பண வசூல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொண்டு, மக்களுக்கு சுயதொழில் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்காகவும், சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காகவும் அந்த அமைப்பின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தலா 600 ரூபா பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு வசூலிக்கப்பட்ட 26,000 ரூபா பணத்துடன் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கடந்த 4 ஆம் திகதி 136,000 ரூபாவை பெற்று கூட்டுறவு வங்கியில் பணத்தை வைப்பிலிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் – ஆண் என ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து 70,300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தில் மொணராகலை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் மற்றும் 32 வயதான சியம்பலாண்டுவ பிரதேசத்தை பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இரு சந்தேக நபர்களும் இலங்கையில் ஏனைய பகுதிகளில் இவ்வாறான மோசடிகளை செய்துள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி நபர்களிடம் சிக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button