பிரான்ஸ்
Trending

ஈபிள் கோபுரத்திற்கு அருகில் கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள Quai de Grenelleஐ சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.

குறித்த கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனத்தில் பல முஸ்லிம்கள் இறந்து கிடப்பதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபருக்கு 2016 இல் மற்றொரு தாக்குதலுக்கு சதி செய்ததற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் அவர் பிரான்ஸ் பாதுகாப்பு சேவைகளின் கண்காணிப்பு பட்டியலில் இருப்பதாக மேலும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button