சுவிஸ்
Trending

உயிர் தப்பி ஓடிய சுவிஸ் ஜனாதிபதி – உக்ரைனில் அதிர்ச்சி

சுவிஸ் ஜனாதிபதி உக்ரைனுக்குச் சென்றிருந்த நிலையில், எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை சந்திக்க நேர்ந்தது.

உக்ரைனுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க அவ்வப்போது நட்பு நாடுகளின் தலைவர்கள் போருக்கு மத்தியிலும் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

அப்படி, உக்ரைனுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்காக சென்ற சுவிஸ் ஜனாதிபதி, அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்றை சந்திக்க நேர்ந்தது.

சுவிட்சர்லாந்து, லாத்வியா மற்றும் லிதுவேனியா நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்குச் சென்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார்கள். அப்போது, ஜெலன்ஸ்கியும் சுவிஸ் ஜனாதிபதியான Alain Bersetம் இணைந்து ஊடகவியலாளர்களை சந்திக்கத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, திடீரென ஏவுகணை ஒன்று வீசப்பட்டுள்ளதாக எச்சரிக்கை மணி ஒலித்தது. ஊடகவியலாளர்களை சந்திக்க இருந்த சுவிஸ் ஜனாதிபதி, உக்ரைன் ஜனாதிபதி மற்றும் லாத்வியா மற்றும் லிதுவேனியா நாடுகளின் தலைவர்களும் உயிர் தப்ப ஓட வேண்டிய நிலை உருவானது.

அனைவரும் பாதுகாப்பான இடமொன்றில் 20 நிமிடங்கள் பதுங்கியிருக்க, பிறகுதான் தெரியவந்தது ஏவுகணை வேறொரு இடத்தை நோக்கி வீசப்பட்டது என்பதும், தவறுதலாக இந்த தலைவர்கள் இருக்கும் இடத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பதும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button