விளையாட்டு
Trending

உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகள் – நாளை இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதல்..!!

ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நாளை மும்பை வாங்டே மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. அதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போதைய அரையிறுதியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா 1983, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளது. நியூஸிலாந்து ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. இந்த உலகக் கோப்பையில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்து தட்டுத்தடுமாறி 4வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் இந்தியா 9 லீக் ஆட்டங்களிலும் வென்று தகுதி பெற்றது.

கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா மோதுகின்றன. முதன்முறையாக உலகக் கோப்பை இறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button