உலகம்
Trending

என்னால் ஜனநாயகத்திற்கு ஆபத்து வராது – டொனால்ட் டிரம்ப்..!

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறும் என கூறப்படுவதை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

டிரம்ப் தான் ஜனாதிபதியானால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவதை வதந்தி என்றும், அது ஜனநாயக கட்சியினரின் தவறான பிரச்சாரம் எனவும் அவர் வர்ணித்துள்ளார்.

நியுயோர்க்கின் இளம் குடியரசுகட்சியினர் கழகத்தில் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப்,

தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனே ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு நான் அச்சுறுத்தல் இல்லை நான் ஜனநாயகத்தை பாதுகாப்பேன் உண்மையான ஆபத்து நேர்மையற்ற ஜோ பைடனே எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பதவிக்காலத்தின் முதல்நாளிற்கு பின்னர் நான் சர்வாதிகாரியாக விளங்கமாட்டேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளமை கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளகது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button