சினிமா
Trending

எல்லோருமே சூப்பர் ஸ்டார் ஆகலாம் – வெளியானது நயன் தாராவின் அன்னபூரணி ட்ரெய்லர்..!!

நயன்தாராவின் 75 ஆவது படமான அன்னபூரணி திரைப்படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் பெரும் வரவேற்பை பெற்ற சூழலில் படத்தின் தற்போது ட்ரெய்லரும் வெளியாகியிருக்கிறது.

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் நயன் சமையல் கலைஞராகும் ஆசையில் இருப்பதையும் அதற்கு வரும் எதிர்ப்புகளையும் மையமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது. ட்ரெய்லரில் வரும் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறி தங்களது வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் பூர்ணிமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைத்திருக்கிறார். அன்னபூரணி படம் டிசம்பர் முதலாம் முதலாம் திகதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button