Uncategorized
Trending

கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதிஹாசன்; கவனம் ஈர்க்கும் போஸ்டர்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ச்சியாக வெற்றி படங்களை இயக்கி, உச்ச நட்சத்திரங்களின் பேவரைட் இயக்குனராக வலம் வருகிறார். அத்துடன் சென்சேஷனல் டைரக்டராக பிசியாக படங்கள் இயக்கி வருகிறார். இந்நிலையில் ராஜ் கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் காம்போ இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது.

ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் எஸ்கே 21, எஸ்டிஆர் 48, தக் லைப் போன்ற படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணையும் ‘இதுவே ரிலேஷன்ஷிப்’ என்ற புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அனேகமாக இது மியூசிக் ஆல்பமாக இருக்கும் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் பாடி, நடனம் ஆடும் மியூசிக் வீடியோவாக தான் ‘இதுவே ரிலேஷன்ஷிப்’ இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கமல், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் மூவரும் ஒரு புராஜெக்டில் இணைந்து பணியாற்ற உள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு இணையத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button