இந்தியா
Trending

கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்ததுறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர் 100 என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா வரும் 24.12.2023 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கனமழை பெய்த நிலையில், மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை கருத்தில் கொண்டு 24.12.2023 அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button