அவுஸ்திரேலியா
Trending

காசா மக்களை எதிரியின் கரங்களை நோக்கி தள்ளவேண்டாம் – அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேலிற்கு எச்சரிக்கை

காசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் எச்சரித்துள்ளார்.

காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்கள் என செல்வதற்கான இடங்கள் மிகக்குறைவு என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலினதும் பாலஸ்தீனத்தினதும் எதிர்காலம் நியாயமான நிரந்தர சமாதானத்திலும் இரண்டுதேசங்கள் தீர்விலும் தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய சூழ்நிலை அனைவருக்கும் தோல்வியாக காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பயங்கரவாதிகளிற்கு எதிரான நகரப்போர்முறையில் மிகவும் திறமையானவர் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போரிட்டஅனுபவம் உள்ளவர் இஸ்ரேலின் உறுதியான ஆதரவாளர் அவர் நீங்கள் பொதுமக்களை எதிரிகளின் கரங்களை நோக்கி தள்ளினால் மூலோபாய தோல்வியை சந்திப்பீர்கள் என குறிப்பிட்டுள்ளார் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தைய மோதல் இடைநிறுத்தம் முடிவிற்குவந்துள்ளதை பாரிய பின்னடைவு என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button