சினிமா
Trending

குழந்தைகளாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் – என்ன ஒரு கிரியேட்டிவான டாஸ்க்..!!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி வர வர போர் அடிப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தான் பயங்கரமாக யோசித்து வித்தியாசமான டாஸ்க் கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். அதாவது பிக் பாஸ் வீட்டை கிட்ஸ் வீடாக மாற்றியிருக்கிறார்கள்.

ஹவுஸ்மேட்ஸில் சிலர் குழந்தைகளாகவும், சிலர் பேசும் பொம்மைகளாகவும் மாறியிருக்கிறார்கள்.

விசித்ராவை ஒரு பெட்டிக்குள் நிற்க வைத்து, இந்த பொம்மை வந்து சீக்ரெட் ஷேரிங் பொம்மை என்று தெரிவித்துள்ளனர். கிட்ஸ் ஜோன் என்று சொன்னதுமே ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் குழந்தைகளாகவே மாறிவிட்டார்கள். இது குறித்த ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

குழந்தைகளாக மாறச் சொன்னால் இந்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் ஓவராக செய்கிறார்கள். முந்தைய சீசன்களில் வந்த டாஸ்க்கை பட்டி டிங்கரிங் செய்திருக்கிறார் பிக் பாஸ். பள்ளியாக மாற்றினால் ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் மனநலகாப்பகத்தில் இருப்பவர்கள் போன்று நடந்து கொண்டார்கள்.

இந்நிலையில் தான் கிட்ஸ் ஜோன் என பெயரை மட்டும் மாற்றி அதே பள்ளி டாஸ்க்கை கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். இந்த சீசனில் பெரிதாக எந்த டாஸ்க்குகளும் கொடுக்கப்படவில்லை. ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸை முதலில் விசாரிக்க வேண்டும் ஆண்டவரே என கமல் ஹாசனிடம் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தையாகவே மாறிய மாயாவை தூக்கியிருக்கிறார் விஜய் வர்மா. அதை பார்த்தவர்களோ, அய்யோ விஜய் உங்களுக்கு மாயாவை பற்றி தெரியாது. அவன் என்னை தவறான எண்ணத்துடன் தொட்டுட்டானு கமல் ஹாசனிடம் புகார் தெரிவிப்பார். இந்த மாயாவிடம் கொஞ்சம் சூதானமாக இருக்கவும். இல்லை என்றால் உங்களுக்கு மீண்டும் ரெட் கார்டு கிடைக்க வழிவகுத்துவிடுவார் என்கிறார்கள்.

இன்றைய ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் சிலர் கூறியிருப்பதாவது, அர்ச்சனாவுடன் ஒப்பிடும் போது பூர்ணிமா எவ்வளவோ மேல். தினமும் சண்டை போட்டால் தான் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார் அர்ச்சனா. பிக் பாஸ் வீட்டு கேமராக்களுக்கு முன்பு நடித்துக் கொண்டிருக்கிறார்.

மாயா ரொம்ப க்யூட்டாக நடித்திருக்கிறார். அர்ச்சனாவை வெளியே அனுப்புங்க பிக் பாஸ். ரொம்ப ஓவராக நடிக்கிறார். இதில் கிட்ஸ் ஜோன் வேறு. ரவீணாவும், அர்ச்சனாவும் சரியான கிரிஞ்ச் என்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button