சினிமா
Trending

சூப்பர் ஸ்டார் கமல்; ஒரே பதிவால் வெடித்த சர்ச்சை – நடிகர் விஷ்ணு விஷால் அதிரடி விளக்கம்…!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஹீரோக்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் சூர்யா, அமீர்கான், பார்த்திபன், ஜெயம் ரவி, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். நடிகர் விஷ்ணு விஷாலும் அந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நிலையில், கமல் மற்றும் அமீர்கான் உடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷ்ணு விஷால் “Superstars are superstars for a reason” என பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியது.

சூப்பர்ஸ்டார் என கமல்ஹாசனையும் அமீர்கானையும் எப்படி சொல்லலாம் என விஷ்ணு விஷாலுக்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். இந்நிலையில், உடனடியாக தனது ட்வீட்டை எதுக்குடா வம்பு என நினைத்துக் கொண்டு “stars are stars for a reason” என மாற்றினார்.

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள விஷ்ணு விஷால் கமலை சூப்பர்ஸ்டார் என்றது தவறான செயல் என எதிர்ப்பு கிளம்பியதும் அந்தர் பல்டி அடித்து சூப்பரை தூக்கி விட்டு வெறும் ஸ்டார் என்று போட்டு விட்டார். அதற்கும் சர்ச்சை வெடிக்கவே தற்போது நான் யாருக்கும் பயந்து அந்த ட்வீட்டை மாற்றவில்லை என்றும் தன்னை பொறுத்தவரை உச்ச நடிகர்கள் அனைவரும் சூப்பர்ஸ்டார்கள் தான் என்றும் தேவையில்லாமல் இந்த விஷயத்தில் வன்மத்தை கக்க வேண்டாம் என்றும் இன்னொரு ட்வீட் போட்டு விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button