சினிமா
Trending

டிஸ்னி லேண்டில் பிரம்மாண்டமாக மகன் பிறந்தநாளை கொண்டாடிய அட்லீ..!!

கடந்த ஆண்டு ஜனவரி 31ம் திகதி இயக்குனர் அட்லீக்கும் பிரியாவுக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அவரது மகனின் முதலாவது பிறந்தநாளை பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில், டிஸ்னி லேண்ட் தீம் பார்க்கில் கோலாகலமாக தனது மனைவி பிரியாவுடன் சென்று கொண்டாடிய புகைப்படங்களையும் தனது மகன் மீரின் க்யூட்டான போட்டோக்களையும் அட்லீ வெளியிட்டுள்ளார்.

போடா போடி படத்தில் சிம்புவும் வரலக்‌ஷ்மி சரத்குமாரும் தங்களது குழந்தையின் பிறந்தநாளை டிஸ்னி லேண்டில் கொண்டாடுவது போல விக்னேஷ் சிவன் பாடல் காட்சியை அமைத்திருப்பார். அதே போல அட்லீ பிரியா அட்லீ மற்றும் குழந்தையுடன் அங்கே சென்று கொண்டாடியுள்ளார்.

அட்லீயின் குழந்தை தனது முதல் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், கொடுத்து வச்ச குழந்தை என்றும் செம க்யூட்டான இருக்கானே மீர் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். ஜவான் படத்தின் வெற்றி அட்லீயை உலகளவில் அடையாளப்படுத்தி உள்ளதாகவும் விரைவில் பான் வேர்ல்ட் இயக்குநராகவும் அட்லீ மாறிவிடுவார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஷங்கரின் இயக்குநராக இருந்து ஷங்கரை விட மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்த சிஷ்யன் அட்லீ மட்டும் தான் என்றும் பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button