சினிமா
Trending

தூங்கிக்கிடந்த சிங்கத்தை தட்டி எழுப்பிய ஹவுஸ்மேட்ஸ் – விசித்ராவை வில்லியாக பார்க்கப்போவது உறுதி…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது வாரம் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. டாஸ்க் படி அத்தனை விறுவிறுப்பு இல்லையென்றாலும் விவாதங்களுக்கும் வாக்குவாதங்களுக்கும் சலைக்காமல் போட்டியாளர்கள் கண்டன்ட் கொடுத்து வருகிறார்கள். இந்த வாரத்தில் உன்னை போல் ஒருவன் டாஸ்க் நடைபெற்றது. சுவாரஸ்யமோ என்டர்டைன்மென்ட்டோ எதிர்பார்த்த அளவுக்கு இந்த டாஸ்கின் மூலம் கிடைக்கவில்லை என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுபோக இன்னும் சில டாஸ்க்குள் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வீட்டில் இந்த வாரம் முழுவதும் குறைவான சுவாரசியத்தோடு இருந்த இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது. எந்த விஷயத்திலும் ஒன்றாக ஒற்றுப் போகாத வீட்டார் இந்த விஷயத்தில் மட்டும் கூட்டு சேர்ந்து விசித்ரா மற்றும் அர்ச்சனாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இது பிளானா? இல்லை தற்செயலா என தெரியவில்லை.

எதிலும் பெரிதாக ஈடுபடவில்லை, வீட்டில் இருப்பது போல தெரியவில்லை என சில காரணங்களை கூறி விசித்ரா மற்றும் அர்ச்சனாவை சுவாரஸ்யம் குறைவான போட்டியாளர்களாக வீட்டார் தேர்ந்தெடுத்தார்கள். யார் வேண்டுமானாலும் விசித்ரா மற்றும் அர்ச்சனாவின் பெயரை சொல்லியிருக்கலாம், ஆனால் வீட்டில் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் டைட்டில் வின்னர் விக்ரம், அவர்கள் இருவரின் பெயரை கூறியது குபீர் சிரிப்பை கொடுத்தது.

விக்ரம் பேசியதை பார்த்த நமக்கு தோன்றியதுதான் விசித்ராவுக்கும் தோன்றியிருக்கிறது போல. விக்ரமை பார்த்து அப்டியாடா? என நக்கலாக கேட்டார் விசித்ரா. வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் நாமினேட் செய்ததன் அடிப்படையில் விசித்ரா மற்றும் அர்ச்சனா இந்த வாரம் குறைவான சுவாரசியத்தோடு இருந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் விசித்ரா மற்றும் அர்ச்சனாவின் பெயரை கூறினார்கள். கானா பாலா, இவர்கள் இருவரும் பிரிந்து நிறைய சம்பவங்களை செய்ய வேண்டும் என காரணத்தை கூறி அவர்களை நாமினேட் செய்தார்.

நாமினேஷன் முடிந்ததும் பேசிய விசித்ரா, ஒன்றாக சேர்ந்து பர்சனலாக செய்திருக்கிறீர்கள் என கூறினார். அதன் பிறகு எப்போதும் போல கேமராவுடன் பேசிய விசித்ரா, விசித்ரா பார்ட் 2 பார்க்க போகிறீர்கள் எனக் கூற, அர்ச்சனா கிடுகிடுவென ஓடிவந்து வித் அர்ச்சனா எனக்கூறினார். இவ்வாறாக ப்ரோமோ முடிந்தது.

வீட்டில் சும்மாவே இருக்கும் விக்ரம், ப்ராவோ, அக்ஷயா ஆகியோர் சுவாரஸ்யமானவர்களாம் ! தேவையானவற்றிற்கு குரல் கொடுத்து, சூப்பராக விளையாடும் அர்ச்சனா மற்றும் விசித்ரா சுவாரசியம் குறைவானவர்களாம் என கமெண்டுகளை பதிவிட்டுவருகிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள். இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா அதிகப்படியான வாக்குகளை பெற்றிருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button