சினிமா
Trending

நயன்தாராவின் அன்னபூரணி – தமன் இசையில் ஆட்டம் போட வைக்கும் பாடல் வெளியீடு…!!

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ரேணுகா, சச்சு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அன்னபூரணி படம் வரும் டிசம்பர் 1ம் திகதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், சமையல் துறையில் சாதிக்க நினைத்து அதில் களமிறங்குவதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இயக்கியுள்ளார் நிலேஷ் கிருஷ்ணா.

இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில டீசர், பாடல் என அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை படக்குழுவினர் உற்சாகப்படுத்தியுள்ளனர். தற்போது இந்தப் படத்தின் பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. பாடலை பார்ப்பவர்களுக்கு உற்சாகமான மனநிலையை கொடுக்கும்வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. நயன்தாரா, ஜெய் ஆகியோர் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button