இந்தியா
Trending

பாஜக உடன் அதிமுகவிற்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை – ஜெயக்குமார் அதிரடி…!!!

இந்தியா: தமிழ்நாடு

இந்திய அளவில் லோக்சபா தேர்தல் களம் அனலடிக்க ஆரம்பித்துள்ளது. கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக பிரிந்து விட்டது. இதனிடையே கூட்டணி பற்றி பேசுவதற்கு குழு அமைத்து ஆலோசனையை தொடங்கி விட்டது. ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரக் குழுவும் தொகுதி பங்கிட்டு குழுவும் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எப்போது கேட்டாலும், எந்த நேரத்தில் கேட்டாலும், தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லையென உறுதிபட கூறினார். பாஜக என்ற பெட்டியை ரயிலில் இருந்து கழட்டி விட்டது விட்டது தான் என தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடக்காத விஷயத்தை சொல்லி திசை திருப்ப முயற்சிக்கிறார், இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது எனவும் கூறினார். அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளிவரும் எனக் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button