சினிமா
Trending

பிரதீப் பற்றி மீண்டும் பேசிய மாயா – வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!

இதுவரை தமிழில் ஆறு பிக் பாஸ் சீசன்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் இதில் எந்த சீசனும் சந்திக்காத ஒரு சர்ச்சையை பிக் பாஸ் சீசன் 7 சந்தித்துள்ளது. இதுவரை பிக் பாஸ் தமிழில் எந்த ஒரு போட்டியாளருக்கும் ரெட் கார்டு வழங்கி அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதில்லை. ஆனால் இந்த சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு அவரை பிக் பாஸ் வெளியேற்றியது.

இது ரசிகர்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்தது. ரசிகர்களுக்கு இந்த சீசனில் மிகவும் பிடித்த போட்டியாளராக இருந்து வந்தவர் தான் பிரதீப். ஒவ்வொரு வாரமும் சக போட்டியாளர்கள் பிரதீப்பை நாமினேட் செய்தாலும் அவருக்கு அதிக வாக்குகளை வழங்கி அவரை ரசிகர்கள் முதல் ஆளாக காப்பாற்றிவந்தனர். மேலும் அவர் பேசும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கைத்தட்டல்களும், ஆரவாரங்களும் கிடைத்தன.

இது சக போட்டியாளர் சிலருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் பிரதீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி சக போட்டியாளர்கள் அவருக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என கமல் முன் முறையிட்டனர். குறிப்பாக பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றத்திற்கு மாயா கேங் தான் காரணம் என அவர்கள் மீது ரசிகர்களை உச்சகட்ட கடுப்பில் இருந்து வருகின்றனர்.

எனவே பிரதீப் ஆண்டனி வெளியேறிய பிறகு அவருக்கு ரசிகர்களின் ஆதரவு மேலும் பெருகியது. இந்நிலையில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கிய விவகாரத்தில் ரசிகர்கள் கமலையும், பிக் பாஸ் குழுவையும் கடுமையாக விமர்சித்தது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க அர்ச்சனா பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக பேசியதால் அவருக்கு ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாயா நேற்று பூர்ணிமா மற்றும் விக்ரமிடம் பேசுகையில்,வெளியே சென்றதும் பிரதீப்பை சந்தித்து பேசலாம்னு இருக்கேன் என்றார். மேலும் என்னதான் பிரதீப் செய்தது தவறு என்றாலும், அவர் வெளியே இப்படி ஒரு பெயரோடு சென்றதை நினைத்து வருந்துகின்றேன் என்பது போல பேசினார் மாயா.

இதைக்கேட்ட ரசிகர்கள், பிரதீப் வெளியே சென்றதற்கு முக்கிய காரணமே மாயா தான். ஆனால் இப்போ பிரதீப் ஆண்டனி மீது அன்பு இருப்பது போல பேசுகிறாரே என கூறி வெளுத்து வாங்கி வருகின்றனர். ஒருவேளை பிரதீப்பிற்கு ஆதரவாக பேசினால் ரசிகர்கள் தனக்கும் சப்போர்ட் செய்வார்கள் என்ற எண்ணத்தில் மாயா இப்படி பேசுகிறாரா எனவும் ரசிகர்கள் சிலர் கமன்ட் அடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button