சினிமா
Trending

புல்லி டீமிற்கு எதிராக கிளம்பிய மணி – உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகும் மாயா..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது ஐம்பது நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு சீசன்களிலும் ஒரு சில போட்டியாளர்கள் டீம் பார்ம் செய்து வருவார்கள். அதுபோல தான் இந்த சீசனில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் இணைந்து தங்களுக்கு என ஒரு டீமை உருவாக்கினார்கள்.

மாயா, பூர்ணிமா, நிக்சன், ஐஷு, ஜோவிகா என இவர்கள் அனைவரும் ஒரு டீமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விளையாடி வருவதாக ரசிகர்கள் முதல் ஒரு சில போட்டியாளர்கள் வரை கூறி வந்தனர். பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதற்கு காரணமே இந்த புல்லி டீம் தான் என ரசிகர்கள் அவர்கள் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர்.

பிரதீப் ஆண்டனியின் துவங்கி தினேஷ், அர்ச்சனா என தொடர்ந்து மாயா மற்றும் அவரது டீமில் உள்ளவர்கள் சில போட்டியாளர்களை டார்கெட் செய்து அவர்களை புல்லி செய்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மாயா மற்றும் அவரது டீமிற்கு எதிராக கிளம்பியுள்ளார் மணி சந்திரா. துவக்கத்தில் மணி சந்திரா மாயா பக்கம் தான் இருந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக மாயா டீம் செய்யும் வேலைகளை பார்த்து கடுப்பான மணி சந்திரா மாயாவிற்கு பதிலடி கொடுக்க துவங்கினார். கடந்த வாரம் மாயா மற்றும் மணி இருவரின் இடையில் மோதல் துவங்கியது.

இதையயடுத்து நேற்றைய டாஸ்கில் இவர்களின் மோதல் மேலும் அதிகரித்தது. நீயெல்லாம் ஒரு ஜட்ஜா என மணியை பார்த்து மாயா கேட்க, அதற்கு மணி, நீயெல்லாம் ஒரு performer ஆ என கேட்டார். இதையடுத்து மாயா வின் முகம் அப்படியே மாறிவிட்டது. இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் மணி செய்தது தான் சரி என அவருக்கு ஆதரவு தருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எலிமினேஷன் என தகவல்கள் வருகின்றன. எனவே அநேகமாக இந்த வாரம் புல்லி டீமில் இருந்து பூர்ணிமா வெளியேறுவார் என்றே அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் அக்ஷயா மற்றும் பூர்ணிமா தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.எனவே டபுள் எலிமினேஷனாக இருக்கும் பட்சத்தில் பூர்ணிமா இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button