சினிமா
Trending

மாயாவிற்கு பட்டப்பெயர் வைத்த தினேஷ் – பங்கமாய் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் விமர்சிக்கப்பட்டு வருபவர் தான் மாயா. இவரும் பூர்ணிமாவும் சேர்ந்து ஒரு சில போட்டியாளர்களை புல்லி செய்து வருவதாகவும் குறிப்பாக பிரதீப் ஆண்டனியின் எலிமினேஷனுக்கு இவர்கள் தான் மிக முக்கிய காரணம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதன் காரணமாகவே இவர்களை ரசிகர்கள் விமர்சித்தும், ட்ரோல் செய்தும் வருகின்றனர். இருந்தாலும் இந்நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் தொடர்ந்து தான் வருகின்றனர். இந்த சீசன் துவங்கிய இரண்டாவது வாரத்திலேயே மாயா வெளியேறுவதாக இருந்தது. அவர்தான் அந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றிருந்தார்.

ஆனால் அந்த வாரம் எலிமினேஷன் இல்லை என பிக் பாஸ் அறிவித்ததால் மாயா தப்பித்து அறுபது நாட்களை கடந்து இந்த சீசனில் பயணித்து வருகின்றார். இருந்தாலும் ரசிகர்களுக்கு மாயா மீது இன்றளவும் கோபம் இருந்து தான் வருகின்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் தினேஷிற்கும், மாயாவிற்கும் இடையே மோதல் வெடித்தது. மேலும் இவர்களின் கைகள் கட்டிபோடப்பட்டன. எனவே இருவரும் சேர்ந்து தான் ஒரு இடத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாயா தன் மேக்கப்பை கலைக்க வேண்டும், என்கூட வாங்க என தினேஷை அழைத்தார்.

ஆனால் தினேஷ் வரமுடியாது என மறுத்தார். எனவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. மாறி மாறி இருவரும் வாக்குவாதம் செய்து வந்தனர். அப்போது மாயா பேபி மாதிரி பண்ணாதீங்க என கூறினார். இதனால் கடுப்பான தினேஷ், ஊர் கிழவி மாதிரி பண்ற என கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த பட்டப்பெயரை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே மாயா மீது பெரும்பாலான ரசிகர்கள் அதிருப்தியில் தான் இருந்து வருகின்றனர். அதே சமயத்தில் தினேஷிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருந்து வருகின்றது. எனவே தினேஷின் ஆதரவாளர்கள் மாயாவை பங்கமாய் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு சிலர் மாயா கண்டிப்பாக இறுதிப்போட்டி வரை சென்றுவிடுவார், அவர் இப்போதைக்கு வெளியேறமாட்டார் என கூறியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button