சினிமா
Trending

மாயா, பூர்ணிமா இடையே முற்றிய வாக்குவாதம்…!!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மாயாவும், பூர்ணிமாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டார்கள். அவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து சக போட்டியாளர்களை பாடாய் படுத்துவதாக பார்வையாளர்கள் கதறி வந்தார்கள். இந்நிலையில் பூர்ணிமாவை நாமினேட் செய்திருக்கிறார் மாயா.

இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என பார்வையாளர்கள் சந்தேகப்படுகிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அனைவர் முன்பும் மாயாவும், பூர்ணிமாவும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

மாயாவும், பூர்ணிமாவும் வாக்குவாதம் செய்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வார கேப்டனான நிக்சனை நேரடியாக நாமினேட் செய்ய வீட்டில் ஒரு மணியை வைத்திருக்கிறார் பிக் பாஸ். கேப்டனின் நிர்வாகத்தில் அநீதி நடக்கிறது என்று நினைத்தால் அந்த மணியை அடிக்கலாம்.

இந்நிலையில் நிக்சனை பூர்ணிமா பாதுகாப்பதாக சீறியிருக்கிறார் மாயா. நல்லா சேவ் பண்றீங்க நிக்சனை என மாயா சொல்வதுடன் ப்ரொமோ வீடியோ துவங்கியிருக்கிறது. இங்க என்ன அநீதி நடந்தது என பூர்ணிமா கேட்க, நான் அநீதினு சொல்லிட்டு அவனுக்கு ஸ்டிரைக் தரலாமே என மாயா கூறினார்.

உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்க பண்ணிக்கோங்க என பூர்ணிமா சொல்ல, அப்போ ஏன் கன்வின்ஸ் பண்றீங்க, எல்லாரையும் பண்ணாதீங்கனு மாயா கேட்டார். இதை நான் இன்ட்ரஸ்டிங்கா பண்ணியிருப்பேனு மாயா சொல்ல, முடிஞ்சா பண்ணுங்கனு பூர்ணிமா சொல்ல, இங்க என்னய்யா நடக்குதுனு பார்வையாளர்களும், ஹவுஸ்மேட்ஸும் குழம்பியிருக்கிறார்கள். விஷ்ணு அடிச்சானா நான் பாயிண்ட் எடுத்து வைக்கிறேன் என்றார் மாயா.

அதை கேட்ட விசித்ராவோ, பூர்ணிமாவுக்கு ஓகே இல்லனா விஷ்ணு அடிக்க மாட்டானு சொல்ல அதை கேட்டு பூர்ணிமா வெட்கப்பட, மாயா சிரிக்க, பார்வையாளர்கள் கடுப்பானார்கள். விசித்ரா கூறியதை கேட்ட பூர்ணிமாவோ, அய்யய்யோ அப்படி எல்லாம் கிடையாது என்று கூறி சிரித்தார்.

நீங்க சொல்ற மாதிரியே நிக்சனை காப்பாத்தணும்னா காபாத்திக்கோங்க என மாயா சொல்வதுடன் ப்ரொமோ வீடியோ முடிந்திருக்கிறது.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, இதை பார்த்தால் நிஜ சண்டை மாதிரி தெரியல. நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவது மாதிரி அழுனு மாயாவும், பூர்ணிமாவும் சொல்லி வைத்து நடிப்பது போன்று இருக்கிறது.

நிக்சனை காப்பாற்ற பூர்ணிமா ஏன் துடிக்க வேண்டும். அவரின் உடல்வாகு நன்றாக இருக்கிறது என்று நிக்சன் சொன்னதாலா?

நீங்க என்ன நிக்சனை காப்பாற்றுவது, முதலில் இந்த வாரம் உங்களை யார் காப்பாற்றுகிறார் என பார்க்கலாம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

நாமினேஷன் லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பூர்ணிமாவை எப்படியும் இந்த வாரம் வெளியேற்றிவிட வேண்டும் என பார்வையாளர்கள் ஒரு முடிவோடு இருக்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button