பிரான்ஸ்
Trending

மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியில் எழுந்துள்ள சர்ச்சைகள்

2024ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டி நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அது தொடர்பான சில சர்ச்சைக்குரிய செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

நேற்று நடைபெற்ற மிஸ் பிரான்ஸ் அழகிப்போட்டியில், 2024ஆம் ஆண்டுக்கான வெற்றியாளராக ஈவா (Eve Gilles, 20) என்னும் இளம்பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெண்களைப் பொருத்தவரை அழகில் கூந்தலுக்கும் ஒரு மிக்குயப் பங்கு இருப்பதாக கருதுவோர் உண்டு. அதுவும், நீண்ட கூந்தல் அழகின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இம்முறை மிஸ் பிரான்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஈவா, குட்டையான கூந்தல் உடையவர் ஆவார்.

முதன்முறையாக குட்டைக் கூந்தல் கொண்ட ஈவா மிஸ் பிரான்ஸ் அழகியாக தேர்வு செய்யப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் வெவ்வேறு விதமான கருத்துக்களை மக்கள் பதிவு செய்துவருகிறார்கள்.

இன்னொரு பக்கம், அழகிப்போட்டியில் கலந்துகொண்ட இளம்பெண்கள் சிலர் உடைமாற்றும்போது, அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை வீடியோ எடுத்து தொலைக்காட்சியில் வெளியிட்டதாக ஒரு சர்ச்சையும் நடந்துகொண்டிருகிறது.

பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று மிஸ் பிரான்ஸ் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த பெண்களின் அரை நிர்வாணக் காட்சிகளை ஒளிபரப்பியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button