சினிமா
Trending

மீண்டும் மோதிய நிக்சன், அர்ச்சனா – அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன்..!!

பிக் பாஸ் 7 வீட்டில் இருந்து இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில் தனியாக வந்து மாட்டினார் நிக்சன். மேலும் நிக்சன் அல்ல விசித்ரா வெளியேற வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியானது.

இந்நிலையில் நிக்சனை தான் வெளியேற்ற வேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பியது. ஆனால் இந்த வாரம் நிக்சன் வெளியே செல்ல வாய்ப்பே இல்லை.

மிக்ஜாம் புயலால் பலர் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுவதாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

இது எல்லாம் ஒரு காரணமா பிக் பாஸ்?. நிக்சனை காப்பாற்ற இப்படி புது முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள்.
இன்னும் எத்தனை நாட்கள் அவரை காப்பாற்றுவீர்கள் என பார்ப்போம்.

பெரும்பாலான மக்கள் வாக்களிக்க இயலாததால்னு சொல்லியிருக்கீங்களே பிக் பாஸ். சென்னையில் ஒரு சில இடங்களில் தான் நிலைமை மோசம். அப்படி என்றால் சென்னையை தவிர்த்து பிற மாவட்ட மக்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியவே இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டு ப்ரொமோ வீடியோக்களிலும் நிக்சனும், அர்ச்சனாவும் தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொண்ணா இதுனு நிக்சன் கேட்க, போடானு அர்ச்சனா திட்ட காலையில் இருந்து ஒரே சண்டையாக இருக்கிறது. நீ அழுவதை பார்த்து நான் அமைதியாக இருப்பதால் பயந்துட்டேனு நினைச்சியா?. நான் கலாய்க்க ஆரம்பித்தால் நீ மூன்று நாள் உட்கார்ந்து அழுவ. அது மூஞ்ச பாரேன். சும்மா வினுஷா வினுஷானு, சொருகிடுவேன் என அர்ச்சனாவை பார்த்து நிக்சன் கத்தியிருக்கிறார்.

இந்த ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

அர்ச்சனா நினைத்தது மாதிரியே நடக்கிறது. நிக்சனை ட்ரிக்கர் செய்தால் இப்படி எல்லாம் செய்வார் என பிளான் பண்ணி செய்தார் அர்ச்சனா. அவர் செய்தது தவறு தான் என்றாலும் சொருகிடுவேனு நிக்சன் மிரட்டியது மிகப் பெரிய தவறு.

உண்மையிலேயே தற்போது தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்கள் பிக் பாஸ். ஆத்திரத்தில் அர்ச்சனாவை சொருகிவிடப் போகிறார். அவர் அப்படி செய்தால் நிகழ்ச்சிக்கே பெரிய பிரச்சனையாகிவிடும் என தெரிவித்துள்ளனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button