உலகம்
Trending

மேடையில் அழுத வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – அந்த கோரிக்கை தன ஹைலைட்…!!

உலகில் மர்மதேசமாக அழைக்கப்படும் நாடுளில் ஒன்று வடகொரியா. இந்த நாட்டின் சர்வாதிகார அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். இந்த நாட்டில் பல்வேறு சட்ட விதிமுறைகள் உள்ளன.

அதோடு அமெரிக்காவை எதிர்க்க பல நாடுகள் அஞ்சும் நிலையில் கிம்ஜாங் உன் அதற்கு விதிவிலக்காக உள்ளார். அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.

பரப்பளவில் வடகொரியா என்பது மிகவும் சிறிய நாடாகும். இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 2.61 கோடி மட்டும் தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக்கூறி மேடையில் கிம்ஜாங் உன் கண்கலங்கி உள்ளார். வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதாவது தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன் என பேசினார்.

இப்படி பேசும்போது கிம்ஜாங் உன் கண்கலங்கினார். இதையடுத்து அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

வடகொரியாவை பொறுத்தமட்டில் 1970-80 காலக்கட்டத்தில் மக்கள் தொகை அதிகரிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கை தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதற்கிடையே தான் கடந்த 1990ல் இருப்பினும், 1990ல் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஏராளமானவர்கள் பலியானார்கள். இதையடுத்து அந்த நாட்டில் மக்கள்தொகை என்பது மேலும் சரிய தொடங்கியது.

இதையடுத்து தான் சமீபத்தில் பெண்கள் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்ததோடு, அந்த பெண்களுக்க இலவச வீடு, மானியங்கள், இலவச உணவு, மருந்து மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள், குழந்தைகளுக்கான கல்விச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

மேலும் தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி நடப்பு ஆண்டில் வடகொரியா பெண்களிடம் குழந்தை பிறப்பு சராசரி என்பது 1.8 என்ற அளவில் உள்ளது. இது வடகொரியாவின் அண்டை நாடுகளை விட அதிகம் தான். இருப்பினும் பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button