சினிமா
Trending

லியோவால் துருவ நட்சத்திரம் படத்திற்கு கிடைத்த நன்மை – வெளிப்படையாக பேசிய கௌதம் மேனன்..!!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இப்படம் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திரையில் வெளியாகவுள்ளது.

துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்வதற்காக கௌதம் மேனன் பல போராட்டங்களை சந்தித்தார். நிதி பிரச்சனை காரணமாக இப்படம் இழுபறியில் இருந்தது. எனவே நிதி திரட்டுவதற்காக கௌதம் மேனன் நடிகராகவும் அவதாரம் எடுக்க துவங்கினார். அந்த பணத்தை வைத்து எப்படியாவது வெளியிடலாம் என போராடி வந்தார் கௌதம் மேனன். இருந்தாலும் இப்படத்தை சுற்றி பல பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்தது. இருப்பினும் அதையெல்லாம் முடித்துவிட்டு தற்போது இப்படம் ஒருவழியாக வெளியாகவுள்ளது

கௌதம் மேனன் சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். என்னதான் லியோ படத்தில் பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் கௌதம் மேனனுக்கு மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டது. ஜோஷி என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க விஜய்யுடன் பயணிக்கும் ஒரு ரோலில் நடித்தார் கௌதம் மேனன்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் வெளியாகவிருக்கும் இந்த சமயத்தில் கௌதம் மேனன் ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுத்து படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றார். அந்த வகையில் ஒரு பேட்டியில் பேசிய கௌதம் மேனன் லியோ படத்தால் கிடைத்த நன்மை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட எனக்கு நிறைய பணம் தேவைப்பட்டது. அப்போது தான் எனக்கு லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் எனக்கு துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட உதவியது. இதற்கு நான் தயாரிப்பாளர் லலித்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார் கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button