இலங்கை
Trending

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து கூற மறுப்புத் தெரிவித்த மஹிந்த…!!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் கருத்துக்கூற மறுத்து விட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (13) ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலார்கள் கருத்துக் கேட்டபோதே உடனடியாக எப்படிக் கருத்துக்கூறுவது எனக்கூறி மறுத்து விட்டார்.

இருந்தபோதும் ஊடகவியலாளர்கள் அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, ” நான் வரவு – செலவுத்திட்ட அறிக்கையை முழுமையாக இன்னும் படிக்கவில்லை.

அதனால் உடனடியாக என்னிடம் கேட்டால் நான் எப்படி கருத்துக் கூற முடியும்? இது தொடர்பாக நன்கு அறிந்தவர்களிடம் கேளுங்கள். நான் படித்த பின்னர் கூறுகின்றேன்.

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவு அதிகரிக்கப்பட்டிருப்பது நல்ல விடயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button