சினிமா
Trending

விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணி உறுதி ; வெளியானது ட்ரெய்ன் ஃபர்ஸ்ட் லுக்….!!

விஜய் சேதுபதி தற்போது மகாராஜா படத்தில் நடித்து வருகிறார். அவரது 50வது படமாக உருவாகும் மகாராஜா, அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரவிந்த் சாமியுடன் இணைந்து காந்தி டாக்ஸ் என்ற பேசும் படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர இந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. அதற்கு முன்னதாக மிஷ்கின் இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார். ஏற்கனவே இக்கூட்டணி பற்றி தகவல்கள் வெளியாகினாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இதனால் இந்தப் படம் ட்ராப் ஆகலாம் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திடீரென மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணி உறுதி ஆகியுள்ளதோடு, படத்தின் டைட்டிலையும் படக்குழு அறிவித்துள்ளது.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ட்ரெய்ன் (Train) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் போஸ்டருடன் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் ரயிலில் நடைபெறுகிறதாம். அதனால் தான் ட்ரெய்ன் என்ற டைட்டிலில் படப்பிடிப்பை தொடங்குகிறாராம் மிஷ்கின். அதேநேரம் படம் வெளியாகும் போது டைட்டில் மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக மலையாள ஹீரோ ஜெயராம் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ட்ரெய்ன் படத்தின் ஷூட்டிங் நம்பவர் இறுதியில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், விஜய் சேதுபதி தற்போது பிஸியாக இருப்பதால், டிசம்பர் 15ம் திகதிக்கு பின்னர் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியான ட்ரெய்ன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button