இந்தியா
Trending

“விமர்சனங்களை கண்டு துவண்டு போகாதீர்கள்” – மாணவர்களுக்கு ஆளுநர் தமிழிசை அறிவுரை…!!

இந்தியா: தமிழ்நாடு

‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’ (EBSB) திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்க ளில் இருந்து 100 மாணவர்கள் ஒரு வார கால கல்வி – கலாச்சார சுற்றுப்பயணமாக ஆரோவில் வந்துள்ளனர். இந்த மாணவர்களிடையே, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.

இந்நிலையில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி அவர் கூறியதாவது…

மாணவர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சிதான். நான் பேராசிரியராக மருத்துவக் கல்லூ ரியில் பணியாற்றிய பின்னரே ஆளுநராக ஆனேன். ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஒருவர் என்னிடம், ‘இட ஒதுக்கீட்டின் மூலமாகத்தான் பெண்கள் முன்னேறி வருகிறார்கள்’ என்று கூறினார். அதற்கு நான், ‘பெண்ணாக இருப்பதால் எங்களுக்கு இந்த பதவி கொடுக்கவில்லை; ஆணை விட அதிக முறை உழைத்ததால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்’ என்று தெரிவித்தேன். ஒரு பெண் ஒரு நிலையை அடைய வேண்டும் என்றால் ஆணை விட பல மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது.

நான் சிறப்பாக பல்வேறு தருணங்களில் பேசியிருந்த போதிலும், என் உயரம் குறித்து விமர்சனங்கள் வந்துள்ளன. நான் உருவத்தில் குறைவாக இருக்கலாம்; ஆனால் என் திறமையின் மூலம் நான் உயரமானவள். வாழ்க்கை இதமாக இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். எப்போ தும் உங்கள் மீது விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் என்னை எப்படி விமர்சித்தாலும் துவண்டு போகாதீர்கள். நான் விமர்சனங்களால் முன்னேறிக் கொண்டே இருப்பேன். நாம் அனைவரும் சாமானியர்கள் அல்ல; அசா தாரணமானவர்கள். அனைவரும் அனைத்திலும் தைரியத்துடன் இருக்க வேண்டும்.

திறமையின் மூலம் உங்களை நாள்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருங்கள். உங்களது மகிழ்ச்சியை எதற்காகவும் தொலைத்து விடாதீர்கள். மதிப் பெண்களை நினைத்து கவலை கொள்ளாதீர்கள். தலையை குனிந்து நடக்காதீர்கள்; பாரதியார் கூறுவது போல நிமிர்ந்த நன்னடையோடு நேர்கொண்ட பாதையில் நடந்து செல்லுங்கள்’ என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button