சினிமா
Trending

விஷ்ணு மீது கோபப்பட்ட அர்ச்சனா – சத்தமில்லாமல் சண்டைக்கு வழிவகுத்த ரவீணா..!!

பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் விஷ்ணு விஜய்க்கும், விஜே அர்ச்சனாவுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் இந்த பிக் பாஸ் வேறு சும்மா இல்லாமல் விஷ்ணு, அர்ச்சனா கையை கட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டார்.

அது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இது என்ன கேம் பிளான் என அர்ச்சனாவிடம் விஷ்ணு கேட்பதுடன் ப்ரொமோ வீடியோ துவங்கியது. அவரும் அமைதியாக பதில் அளித்தார். இந்நிலையில் அங்கு வந்த ரவீணாவோ, ப்ரெண்ட்ஸ் ஆவாதீங்கணா, சண்டை போடுங்கணானு விஷ்ணுவிடம் தெரிவித்தார்.

அதை கேட்ட அர்ச்சனாவோ, நான் எமோஷனலா பிரேக் ஆவது உங்களுக்கு எல்லாம் ஜாலியா இருக்கா என ரவீணாவிடம் கோபப்பட்டார். சும்மா விளையாட்டா பேசிட்டு இருந்தேன். என்னை எதுக்கு திட்டுறீங்கனு அர்ச்சனாவிடம் கேட்டார் ரவீணா.

இதையடுத்து மேலும் டென்ஷன் ஆன அர்ச்சனாவோ, லப லப லபனு கத்துறீங்க. சின்னக் குழந்தையா நீங்க. விடுங்கடா. இந்த ஆளுடன் இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல. வச்சுட்டு போகச் சொல்லுங்க, ச்சீனு சொல்லிட்டு இடத்தை காலி செய்தார். அத்துடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ஒருவாட்டி கத்தினால் பரவாயில்லை. எப்பொழுது பார்த்தாலும் கத்துகிறார், சண்டை போடுகிறார் இந்த அர்ச்சனா. டிவி சீரியலுக்கு பதில் பிக் பாஸ் வீட்டில் திறமையாக நடித்துக் கொண்டிருக்கிறார். காதெல்லாம் வலிக்குது பிக் பாஸ். அவரை கத்த வேண்டாம் என்று சொல்லுங்கள்.

விஷ்ணு அமைதியாக இருந்தால் கூட தேவையில்லாமல் கத்தி தன் பெயரை கெடுத்துக் கொள்கிறார் அர்ச்சனா. ஆரம்பத்தில் சுவாரஸ்யமான ஆளாக இருந்தார். வர வர எரிச்சல் அடைய வைக்கிறார். அர்ச்சனா கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

கோபம் தான் உங்களுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுக்கும் என யாரோ உங்களிடம் தவறாக சொல்லியிருக்கிறார்கள். கேமில் கவனம் செலுத்தவும் என தெரிவித்துள்ளனர்.

அர்ச்சனாவை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் விஷ்ணு. இது கூட புரியாமல் சும்மா கத்துகிறார் அர்ச்சனா. இது அவருக்கு நல்லது இல்லை. முன்னதாக அர்ச்சனா டென்ஷனாகி கத்தியபோது டைட்டில் வின்னர் சரவண விக்ரம் தான் அவரை சமாதானம் செய்ய முயன்றார். அர்ச்சனா மீது தலைவனுக்கு அக்கறை இருக்கிறது என பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விஷ்ணு விஜய் பற்றி பிக் பாஸிடம் புகார் தெரிவித்துள்ளனர் அர்ச்சனா ஆதரவாளர்கள். இந்த வார நாமினேஷனில் இல்லை என்கிற தைரியத்தில் அர்ச்சனாவை தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார் விஷ்ணு. இது என்னனு தட்டிக் கேளுங்கள் பிக் பாஸ். அர்ச்சனா ரொம்ப பவாம். நிம்மதி இல்லாமல் இருக்கிறார் என்கிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button