சினிமா
Trending

வீட்டை உயரமா கட்டியதால் தப்பித்தேன் – மிதக்கும் கார் மேல அமர்ந்து வீடியோ வெளியிட்ட மன்சூர் அலிகான்…!!

கடந்த திங்கட்கிழமை மிக்ஜாம் புயல் வரலாறு காணாத மழைப்பொழிவுயை கொட்டி தீர்த்தது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன.

வெள்ளத்தில் தவித்த மக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பல்வேறு தொண்டுநிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் அவர் கூறியிருப்பதாவது…

இது அரும்பாக்கம். 100 மீட்டர் தூரத்தில் கூவம் ஆறு இருக்கிறது. அதையொட்டி வீடுகள் இருப்பதால் பெரும்பாலும் பட்டா இல்லாத நிலங்கள். அதனால் அப்போது கட்டுகிற பொழுது தாழ்வாக கட்டியுள்ளார்கள். நான் கொஞ்சம் உயரமா கட்டியதால் தப்பித்தேன். ஆனால் வீட்டுக்குள் மீனெல்லாம் வந்துவிட்டது.

செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருவது மிகப் பெரிய அதிசயம். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடாமல் இருந்தால் அணை உடைந்துவிடும். ஏறி உடைஞ்சிருச்சினா சென்னையே மூழ்கிவிடும். குஜராத்தில் அதிக சுவர் கடிகாரம் செய்யும் இடமான மோர்பியில், நடு ராத்திரியில் அந்த நகரமே மூழ்கி விட்டது. இதில் பலர் இறந்து போனார்கள். அப்போது அந்த சம்பவம் இந்தியாவிற்கே தெரியாது. பிபிசியில் செய்தி வெளியான பிறகு தான் அப்போதைய இந்திய அரசு விழித்தெழுந்து காப்பாற்றியது என்று அந்த வீடியோவில் மன்சூர் அலிகான் பேசி உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button