சினிமா
Trending

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நயன்தாரா – குவியும் பாராட்டுக்கள்..!!

கனமழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியதை அடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தற்போது மெல்ல மெல்ல மழை குறைந்து வந்தாலும் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்றே தெரிகின்றது. இந்த சமயத்தில் திரைபிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். நடிகர் ஹரிஷ் கல்யாண் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக நிவாரண நிதி வழங்கினார்.

கலக்கப்போவது பாலாவும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார். அதுபோல பார்த்திபன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். விஜய் தன் மக்கள் இயக்கத்தை அஜித்தும் சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருவதாக தகவல் வருகின்றன. இந்நிலையில் நடிகை நயன்தாரா மக்களுக்கு உதவி செய்து வருகின்றார்.

தண்ணீர், நாப்கின், உணவு போன்றவற்றை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் ஃபெமி என்ற நிறுவனத்தின் மூலம் வழங்கினார் நயன்தாரா. இதைகேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நயன்தாராவை மனதார பாராட்டி வருகின்றனர். படங்களில் மட்டுமல்லாமல் நயன்தாரா நிஜத்திலும் நாயகியாக இருக்கின்றார்.

இந்நிலையில் நயன்தாரா தற்போது வியாபாரம், நடிப்பு, தயாரிப்பு என பிசியாக இயங்கி வருகின்றார். விரைவில் தன் கணவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் முக்கியமான ரோலில் நயன்தாரா நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button