இந்தியா
Trending

24 மணி நேரமும் அரசியல் செய்பவன் நான்! என்னிடமே அரசியலா? – திருமாவளவன் எடுத்த தீர்க்கமான முடிவு…!!

தமிழ்நாடு

தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாறுகிறார் என சிலர் கிளப்பிவிட்டுள்ளதை அறிந்து கொதித்துப் போன அவர், யார் ஆதரித்தாலும், யார் ஆதரிக்காவிட்டாலும், வெற்றி வாய்ப்பை பெற்றாலும் சரி -இழந்தாலும் சரி சிதம்பரம் தொகுதியில் தான் நிற்பேன் என மிகத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற விசிக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

தாம் சிதம்பரம் தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாறவுள்ளதாக கடலூர் மாவட்ட லோக்கல் திமுக நிர்வாகிகள் சிலர் தான் கிளப்பி விட்டிருப்பார்கள் என்று யூகித்த திருமாவளவன் சூசகமாக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் ஒரு முறை இரு முறை அல்ல 7 முறை போட்டியிட்டிருக்கிறேன் என்றும் இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறேன் எனவும் தொகுதியை அந்தளவுக்கு தாம் நேசிக்கிறேன் எனவும் பேசியிருக்கிறார் திருமாவளவன். தாம் மீண்டும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ள திருமாவளவன், யாரோ தனக்கு வேண்டாத சிலர் தான் தாம் தொகுதி மாறவுள்ளதாக வதந்தியை பரப்புகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி தனது சொந்தத் தொகுதி என்றும் இந்த தொகுதிக்கு எதிராக தாம் ஒரு போதும் செயல்பட்டதே இல்லை எனவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் மக்களோடு இருக்கும் அரசியல் தலைவர் தாம் என்றும் தமிழகம் மட்டுமின்றி தென் இந்தியா முழுவதும் சுற்றி வந்துக் கொண்டிருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் திருமாவளவன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button