அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் அரசாங்கம் நடத்திய உயர்தர பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுத்து கணிசமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
விக்ரோரியன் தமிழ் சங்கப் பாடசாலையில் மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
இதில் மாநிலத்தில் முதலாமிடத்தை மதுஷன் சுந்தரமோகன் பெற்றுள்ளார்.
மேலும் செல்வி கிரிஷா ரேகா, திவ்வியா தேவபாலன், சுவாதி சுஜேந்திரன், திவ்வியா தயாளன், ஆதனா அகிலன், அர்ச்சரா பிரன்ரா, சாகரி பிரகலாதன், பிரசித்தா பிரதாபன் , மற்றும் சஷினி ரோஹன் மாணவர்களும் நாற்பதுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழை மறவாது தமிழ் உணர்வுடன் வாழும் சிறுவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.