இந்தியாவின் அண்டைய நாடான வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலானது நேற்று (07) அன்று பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 170 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்நாடில், கிட்டத்தட்ட 119 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் வாக்குகளானது உடனடியாக எண்ணப்பட்ட நிலையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவரான ஷேக் ஹசீனா 1996 முதல் 2001 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார்.
மேலும் இவர் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். இதை தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 5வது முறையாக பிரதமர் பதவியை ஏற்கிறார்.
மொத்த இடங்களின் எண்ணிக்கையானது 300 அதில் 264 இடங்களின் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றியை கைப்பற்றியது. அவாமி லீக் கட்சியின் கூட்டணி கட்சியான ஜதியா கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது.