சமோவா மாநிலத்தில் முதன்முறையாக இடம்பெற்ற சர்வதேச அழகிப்போட்டியில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார்.
சர்வதேச மிஸ் குளோபல் அழகி போட்டியில் சமோவா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முத்து குருப்பு என்ற யுவதியே இரண்டாம் இடத்தைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவரது தாயார் சமோவா நாட்டைச் சேர்ந்த பெண் எனவும், தந்தை இலங்கையர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச மிஸ் குளோபல் அழகிப்போட்டியில் இணையும் வாய்ப்பையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.