பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஊழல் எதிர்ப்பு நீதிமன்றம் நேற்று புதன்கிழமை இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசியத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, அரசு இரகசியங்களை கசியவிட்டது தொடர்பான வழக்கில் கானுக்கு செவ்வாய்க்கிழமை (30) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஒரு நாளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
எனினும், அந்த வழக்குகள் அரசியல் பழிவாங்கல் காரணமாக தொடரப்பட்டிருப்பதாக இம்ரான் கான் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.