Breaking Newsஇலங்கை
தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி - மாத்தளை பிரதான வீதி!
தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி - மாத்தளை பிரதான வீதி!
கண்டி – மாத்தளை பிரதான வீதி (A9) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குறணையில் உள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து, வரிசையிலுள்ள மேலும் சில கடைகளுக்கும் பரவியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இன்று (05) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரையில் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உணவகத்தில் சுமார் 50 எரிவாயு சிலிண்டர்கள் இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.