முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளின் பெறுமதி 97 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகள் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோரின் பெயரில் பராமரிக்கப்பட்டு வருகின்றன