புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையக பிராந்திய செயலாளராக திகழ்ந்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு இடதுசாரி இயக்கத்தில் இணைந்ததிலிருந்து, நாட்டின் பல்வேறு போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வரும் இவர், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், மலையக மக்களின் காணி வீட்டு உரிமை, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுதந்திர பாலஸ்தீன் ஆதரவு, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் 2022 அரகல போராட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய போராட்டங்களில் முன்னணிப் பங்கு வகித்துள்ளார் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மக்கள் பிரதிநிதியாக”
2018 ஆம் ஆண்டு உக்குவளை பிரதேச சபைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், சமூக நீதி, மலையக தமிழ், முஸ்லிம் மற்றும் தமிழ் தேசிய இனங்களின் உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்து வருகிறார். தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக மக்கள் நலனுக்காக செலவிட்டுள்ளார். ரத்வத்த தோட்டத்தில் ஒரு குடும்பத்தின் வீடு உடைக்கப்பட்ட சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, பெரும் போராட்டத்தை நடத்தி, கபினட் அமைச்சரை ரத்வத்த தோட்டத்திற்கு வர வைத்த பெருமை இவருக்கு உள்ளதாக சுற்று வட்டாரங்கள் பெருமை பாராட்டியுள்ளனர்.
மேலும் இவர் “மாத்தளை சாஹிரா தேசியக் கல்லூரியில்” உயர்தரம் வரை பயின்று, கற்பித்தலில் தேசிய டிப்ளோமா முடித்து ஆசிரியராகவும், போராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் இளங் கலைமானி பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக
தொடர்புக்கு: 0712836107
*டேவிட் சுரேன் – மக்களின் நம்பிக்கை