நாடு முன்னேற வேண்டுமானால் அதற்கு தேசிய மூலோபாய திட்டமிடல் அதிகாரசபை அவசியமாகும் என சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
நேற்று (15) “தெரண 360” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,
”அமைச்சர்கள் எடுக்கும் தன்னிச்சையான தீர்மானங்களினால் நாடு பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ளது.
எனவே, அமைச்சரவையில் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக இது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும், அதற்காகவே புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய தேசிய மூலோபாய திட்டமிடல் அதிகார சபை அவசியமானது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
”தேசிய மூலோபாய திட்டமிடல் அதிகாரசபையை நாங்கள் முன்மொழிகிறோம். இதன் மூலம்தான் முடிவுகள் எடுக்கப்படும்.
யார் ஆட்சியைப் பிடித்தாலும் இந்த மூன்றாம் உலகத்தில் நாம் ஒரு அங்குலம் முன்னேற வேண்டுமானால் இந்த தேசிய மூலோபாய திட்டமிடல் அதிகார சபை அவசியம். இல்லையேல், ஒரு அமைச்சரை தன்னிச்சையாக முடிவெடுக்க விடுவதால்தான் இன்று இந்த பெரும் கடனில் சிக்கித் தவிக்கிறோம்” என்றார்.