பாராளுமன்ற தேர்தல் 2024 மலரும் மலையகம் சுயேற்சை குழுவின் முதலாவது பிரச்சாரகூட்டம் 16.10.2024 சாமிமலை 200 ஏக்கர் தோட்டத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் சுயேற்சை குழுவின் தலைவர் ரூபன் மற்றும் சுயற்சைகுழுவின் வேட்பாளர்களாகிய துஷாந்தன், ஞானசேகர், கேதீஸ்வரன், தியாகராஜா, கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய சுயேற்கை குழு தலைவரும் காற்பந்து சின்னத்தில் போட்டியிடும் ரூபன்,
நான் படித்தது கவிரவில தமிழ் மகா வித்தியாலயம் நான் பிறந்து வளர்ந்த எமது ஊருக்காகவும் எனது மாவட்டமாகிய நுவரெலியா மாவட்டத்திற்கும் என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் செய்து முடிப்பேன் என்றும், நான் யாரையும் குறைசொல்லும் நோக்கத்தில் அரசியலுக்கு காலடி எடுத்து வைக்கவில்லை மாறாக எனது சமூகம் என் சொந்தங்களுக்கு மாற்றத்தினை ஏற்படுத்தி அவர்களின் கனவுளை நினைவாக்கவே வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவைளை அவர் மேலும் கருத்து தெரிவிக்கையின் தோட்ட தொழிலாளர்கள், பஸ் சாரதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அன்றாட ஊதியத்திற்கு வேலை செய்பவர்கள், மருத்துவர்கள், கடை வர்த்தகர்கள், பிச்சை எடுப்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள், பூக்கடை, வடைகடை, சிறு வியாபாரிகள், பஸ்களில் பொருட்களை விற்பனை செய்பவர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், வேன் சாரதிகள், பாடசாலை சேவை செய்யும் வாகனதாரர்கள் அனைவரும் என் சொந்தங்கள் அவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் அறிந்தவன் என்ற வகையிலும் என் சமூகம் படும் கஷ்டத்தினை தான் நேரில் காண்டவன் என்ற ரீதியிலும் இந்த அரசியல் களத்திற்கு வந்ததாகவும் மாற்றத்தினை விரும்புபவர்கள் கண்டிப்பாக எனக்கு ஆதரவு தருவார்கள் என்றும் தான் நம்புவதாகவும் உறுதியளித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் பாராளுமன்றம் சென்றால் 300 நாள் வேலைதிட்டத்தி;ன் மூலம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் இதேவேளை அவர் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் பழையமாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.