Homeஇலங்கை

வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வட்ஸ்அப் சேவைகள்

வழமைக்கு திரும்பிய பேஸ்புக், வட்ஸ்அப் சேவைகள்

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று (11) நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் வட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

நேற்றிரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர். 

இந்நிலையில், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வௌியிட்டிருந்தது.

அதில், “தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக சில பயனர்களின் பயன்பாடுகளை அணுகும் திறனைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button