சமீபத்தில் நிறைவடைந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் ஏற்கனவே கசிந்ததாகவும், எனவே குறித்த பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடுமாறு கோரி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடவடிக்கைகள் இன்று (17) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பமானது.
யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
இன்று மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை நிறைவு செய்திருந்தனர்.
நாளை (18) எதிர்தரப்பு சட்டத்தரணிகள் தங்கள் வாதங்களை முன்வைக்க உள்ளனர்.
இதற்கிடையில், ஏதேனும் சமரசம் காணப்படுமாயின் நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு இரு தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.