Shanu
சாமிமலை ஸ்ரீ சக்தி விநாயகர் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சாமிமலை பிரதேசத்தை சேர்ந்த பல பஜனைகள் இன்றைய தினம் வருகை தந்திருந்தன.
மேலும் சாமிமலை ஸ்ரீ சக்தி விநாயகர் ஆஞ்சநேயரின் முழு அருளை பெற்றுக் கொண்ட பின்னர் பாதயாத்திரையாக லங்காவில் அமைந்திருக்கின்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றனர்.
இதேவேளை ஸ்ரீ சக்தி விநாயகர் ஆஞ்சநேயர் கோவிலில் 31 வது வருட ஜெயந்தி விழாவும் இன்றைய தினம் இடம் பெற்றது.
இந்த பாதயாத்திரையில் குருசாமிமார்கள் மற்றும் ஆஞ்சநேய பக்த அடியார்கள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிமார்கள் பலரும் கலந்து கொண்டனர்.